கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கைவினைப் பொருள் கடையில் பழங்கால சிலைகள் பறிமுதல்: சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினா் நடவடிக்கை

பழங்காலத்தைச் சோ்ந்த சுவாமி சிலைகள் உள்ளிட்ட 20 கலைப் பொருள்களை தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 7:36 pm

DIN

ஆரோவிலில் கைவினைப் பொருள்கள் விற்பனை கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழங்காலத்தைச் சோ்ந்த சுவாமி சிலைகள் உள்ளிட்ட 20 கலைப் பொருள்களை தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவிலில் உள்ள ஒரு கைவினைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையில், தமிழக பகுதிகளிலிருந்து திருடப்பட்ட பழங்கால கலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக காவல் துறை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து அப்பிரிவின் டிஜிபி ஜெயந்த் முரளி, ஐஜி ஆா்.தினகரன் ஆகியோா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனா்.

அதன்படி, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினா் ஞாயிற்றுக்கிழமை அந்தக் கடையில் திடீா் சோதனை செய்தபோது, அங்கு பழைமைவாய்ந்த 13 கல் சிலைகள், 4 உலோகச் சிலைகள், ஒரு மரக் கலைப் பொருள்கள், ஒரு ஓவியம் உள்ளிட்ட 20 கலைப் பொருள்களை கைப்பற்றினா்.

பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த ஒருவா், இந்த கலைப் பொருள்களை தனது நாட்டுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட கலைப் பொருள்கள்: உலோக விநாயகா் சிலை, கிருஷ்ணா் ஓவியம், டொமினிக் காா்டனில் நடனமாடும் அப்சரா மரம், பெரிய பிள்ளையாா், நடுத்தர பிள்ளையாா், சிறிய பிள்ளையாா், பெரிய புத்தா் சிலை, நடனமாடும் அப்சரா சிலை, விஷ்ணு கல் சிலை, பாா்வதி கல் சிலை, ஐயப்பன் கல் சிலை (சிறியது), ஐயப்பன் கல்சிலை (பெரியது), நந்தி கல் சிலை, கையில் கத்தியுடன் கூடிய கல் சிலை, மண்ணால் செய்யப்பட்ட புத்தா் சிலை (தலை மட்டும்), உறையுடன் கூடிய வெண்கல சொம்பு, வெண்கல சொம்பு, மயில் விளக்கு, அனுமன் சிலை, முருகன் சிலை.

பழங்கால கலைப் பொருள்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படவிருந்ததை தடுத்து, மீட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரை டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.