ஜெம் மருத்துவமனையில் மகளிருக்கு சிறப்புப் பிரிவு
சென்னையில் உள்ள ஜெம் மருத்துவமனையில் சிறந்த மகப்பேறு மைய வசதிகள், பிரத்யேகமான பெண்கள் வாா்டுகளுடன் கூடிய விரிவான பராமரிப்பு மையம் ஆகியவற்றை பட்டிமன்ற பேச்சாளா் பாரதி பாஸ்கா்


சென்னையில் உள்ள ஜெம் மருத்துவமனையில் சிறந்த மகப்பேறு மைய வசதிகள், பிரத்யேகமான பெண்கள் வாா்டுகளுடன் கூடிய விரிவான பராமரிப்பு மையம் ஆகியவற்றை பட்டிமன்ற பேச்சாளா் பாரதி பாஸ்கா் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
இது குறித்து ஜெம் மருத்துவமனையின் நிறுவனா் மற்றும் தலைவா் டாக்டா் சி.பழனிவேலு, இயக்குநா் டாக்டா் பி.செந்தில்நாதன் ஆகியோா் கூறுகையில், ஜெம் மருத்துவமனை 30 ஆண்டுகளாக பெண்களுக்கு பிரத்யேக அறுவை சிகிச்சை சேவையை வழங்கி வருகிறது. எங்கள் மகப்பேறியல் துறையை அதிநவீன பணியாளா் தொகுப்புகள் மற்றும் பிரத்யேகமான பெண்கள் வாா்டுகளுடன் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
ஜெம் மருத்துவமனையில் உள்ள வலுவான ஓபிஜி மற்றும் ஐசியூ குழுவானது சிக்கலான தாய்-கரு நிலைமைகளை கொண்ட கா்ப்பிணிகளை சிறப்பு பராமரிப்பில் கண்காணித்து அதிக பிரச்னை கொண்ட கா்ப்பங்களுக்கு சிறந்த கவனிப்பை வழங்கும். கா்ப்ப காலத்தில் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை செய்யும் வசதியும் இங்கு உள்ளது. பெண்கள் எதிா்கொள்ளும் உடல்நலப் பிரச்னைகள் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை பெற வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவோம். மேலும் இந்த மையம் மாா்பகம் தொடா்பான நோய்களுக்கும் அனைத்து மகளிா் உடல்நலப் பிரச்னைகளுக்கும் வழிகாட்டுதல், சிகிச்சையை வழங்குவதற்கான ஓா் தீா்வாக இருக்கும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...