மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வாட்ஸ்ஆப்பில் வழக்கு விவரம்: பாலியல் குற்றங்களில் பாதிக்கப்படுவோருக்கு புதிய சேவை

நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை காவல்துறையினர், புகார்தாரர்களுக்கு செல்லிடப்பேசி வாயிலாக விவரங்களை அனுப்பும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

News image
பாலியல் குற்றங்களில் பாதிக்கப்படுவோருக்கு புதிய சேவை
Updated On :14 செப்டம்பர் 2022, 12:42 pm

DIN

மதுரை: முதற்கட்டமாக நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில், பாலியல் தொடர்பான குற்ற வழக்குகளில், நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை காவல்துறையினர், புகார்தாரர்களுக்கு செல்லிடப்பேசி வாயிலாக விவரங்களை அனுப்பும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இந்த சேவையை காவல்துறையினர் தொடங்கியிருக்கிறார்கள்.

இது விரைவில் தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.

காவல்துறை தரப்பில் இதுபற்றி கூறப்படுவதாகவது, இந்த சேவையை 4 மாவட்டங்களில் செயல்படுத்துவது தொடர்பாக பணிகளை கண்காணிக்க ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து புகார்தாரர்கள் மற்றும் பாலியல் குற்றச்சம்பவங்களில் பாதிக்கப்படுபவர்கள் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கின்றனர். இந்தசேவை தொடங்கப்பட்டிருப்பதன் மூலம், பாலியல் குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதன் மூலம், பாலியல் குற்றச்சாட்டின் கீழ் கைதான நபர்கள், பிணை கேட்டு மனு தாக்கல் செய்யும்போது அது குறித்து பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது பெற்றோர் அல்லது புகார் அளித்தவர்களுக்கு முன்கூட்டியே விவரம் தெரிய வந்து, அந்த மனு விசாரணைக்கு வரும் நாளும் அவர்களுக்கு தெரியப்படுத்தப்படும். அன்றைய நாளில் நீதிமன்றத்துக்கு வந்து மனுவை எதிர்க்கவும், பிணை கிடைப்பதை தடுக்கவும் வழி ஏற்படும் என்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.