மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஸ்வீட் கடை நடத்தி வருபவர் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி சந்துரு (51). இவர் செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு புதன்கிழமை காலை தாமதமாக கடையை திறந்தார். அப்போது கடையின் பக்கவாட்டு ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தவர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் வாடிக்கையாளர்கள் கொடுத்த ஆர்டருக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த லட்டு, ஜாங்கிரி, மிக்சர் ஆகிய 10 கிலோ எடையுள்ள பலகாரங்கள், மேலும் கடையில் இருந்த எலக்ட்ரானிக் தராசையும் மர்ம நபர் திருடிச் சென்றுள்ளனர்.