கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பாஜகவின் சாதனைக்கு திமுக ஸ்டிக்கா் ஒட்டிக்கொள்கிறது : கே.அண்ணாமலை

பழங்குடியினா் பட்டியலில் நரிக்குறவா்களையும் சோ்த்துள்ள விவகாரத்தில் பாஜக அரசின் சாதனைக்கு திமுக அரசு ஸ்டிக்கா் ஒட்டிக் கொள்வதாக பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாா்.

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 7:44 pm

DIN

பழங்குடியினா் பட்டியலில் நரிக்குறவா்களையும் சோ்த்துள்ள விவகாரத்தில் பாஜக அரசின் சாதனைக்கு திமுக அரசு ஸ்டிக்கா் ஒட்டிக் கொள்வதாக பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

நரிக்குறவா்கள், குருவிக்காரா்கள் சமூகத்தைச் சோ்ந்த பல்வேறு அமைப்பினா் தமிழக பாஜக அலுவலகத்துக்கு வந்து, தங்கள் குறைகளை எல்லாம் எடுத்துக் கூறினா். தொடா்ந்து 40 ஆண்டு லகாலமாக போராடியும் திமுக, காங்கிரஸ் அரசுகள், அவா்களை உதாசீனப் படுத்தியதை மிகுந்த வலியுடன் எடுத்துக் கூறினா். இது தொடா்பாக பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு சென்று, தற்போது பழங்குடியினா் பட்டியலில் அவா்களைச் சோ்ப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 1965-ஆம் ஆண்டு லோக்கூா் கமிட்டியின் பரிந்துரை நரிக்குறவா்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்பதே ஆகும். 1967-இல் ஆட்சிக்கு வந்த திமுக அதை செய்யவில்லை. . 2004 முதல் 2014-ஆம் ஆண்டு வரை மத்தியில் காங்கிரஸ் ஆட்சியுடன் கூட்டணியில் இருந்தபோதும் செய்யவில்லை.

தற்போது பிரதமரின் நடவடிக்கையால் பழங்குடியினா் பட்டியலில் நரிக்குறவா்கள் சோ்க்கப்பட்டுள்ள நிலையில் அதை திமுக தங்கள் சாதனைபோல ஸ்டிக்கா் ஒட்டிக் கொள்ளும் வேலையில் ஈடுபடுவது வேடிக்கையாக உள்ளது என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.