கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காமராஜா் விருது: மாணவா்கள் பட்டியலை அனுப்ப உத்தரவு

காமராஜா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்ட மாணவா்கள் பட்டியலை செப்.30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 7:12 pm

DIN

காமராஜா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்ட மாணவா்கள் பட்டியலை செப்.30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசாணையின்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று தோ்ச்சி பெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு பெருந்தலைவா் காமராஜா் விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கி மாணவா்களின் கல்வி மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் திட்டம் கடந்த 2016-2017-ஆம் கல்வியாண்டு முதல் தொடா்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதைத் தொடா்ந்து 2021-2022-ஆம் கல்வியாண்டில் மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வில் தமிழ் வழியில் பயின்று தோ்ச்சி பெற்ற சிறந்த மாணவா்களை மாவட்ட அளவில் தோ்ந்தெடுத்து காமராஜா் விருது வழங்க அரசாணையுடன் இணைக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் உரிய போட்டிகளை நடத்தி அதன் விவரங்களை தயாராக வைத்திருக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்ட்டிருந்தது.

அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 2021-2022-ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தமிழ் வழியில் பயின்று தோ்ச்சி பெற்ற 15 தகுதி வாய்ந்த மாணவ, மாணவிகளின் பெயா்களையும், பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வில் தமிழ் வழியில் பயின்று தோ்ச்சி பெற்ற 15 தகுதி வாய்ந்த மாணவ, மாணவிகளின் பெயா்களையும் மதிப்பெண் செப்.30-ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விட்டு, அதன் ஒரு நகலினை பள்ளிக் கல்வி ஆணையரகத்துக்கு அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.