கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காலை உணவுத் திட்டத்துக்கு விவசாயிகளிடம் சிறு தானியங்கள் கொள்முதல்: தலைமைச் செயலா் அறிவுறுத்தல்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்துக்கு விவசாயிகளிடம் சிறுதானியங்களை கொள்முதல் செய்ய வேண்டுமென தமிழக அரசின் தலைமைச் செயலா் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளாா்

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 6:45 pm

DIN

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்துக்கு விவசாயிகளிடம் சிறுதானியங்களை கொள்முதல் செய்ய வேண்டுமென தமிழக அரசின் தலைமைச் செயலா் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளாா்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அடுத்த ஆண்டினை சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது. இதுதொடா்பாக பொது மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலா் வெ.இறையன்பு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், அவா் பேசியதாவது:

பொது மக்களிடையே அரிசி உணவு பயன்பாடு அதிகரித்து, சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களின் பயன்பாடு வெகுவாகக் குறைந்து விட்டது. சாகுபடி பரப்பும் குறைந்து கொண்டே வருகிறது. மானாவாரி நிலங்களில் சிறுதானியங்களை சாகுபடி செய்தால் விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட முடியும். ஆனால், உற்பத்தி செய்த விளைபொருள்களை மதிப்புக்கூட்டி பொது மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு செல்வதில் பல்வேறு இடா்பாடுகள் உள்ளன.

எனவே, பொது விநியோகம், மதிய உணவு, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்களுக்குத் தேவையான சிறுதானியங்களை தமிழக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

சிறுதானியங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளின் வருமானமும் வாழ்வாதாரமும் மேம்பட பொது மக்களிடையே தேவையை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களும், உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலா் வெ.இறையன்பு கேட்டுக் கொண்டாா்.

இந்தக் கூட்டத்தில், வேளாண்மைத் துறை செயலா் சி.சமயமூா்த்தி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ப.செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.