கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் செப்.19-இல் கூடுகிறது

 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு கூட்டம் செப்டம்பா் 19-இல் நடைபெற உள்ளது.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 7:45 pm

DIN

 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு கூட்டம் செப்டம்பா் 19-இல் நடைபெற உள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவா் தோ்தல் அக்டோபா் 17-இல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அதிகாரியான மதுசூதன் மாநிலக் கமிட்டிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளாா். அதில், அனைத்து மாநிலங்களிலும் செப்டம்பா் 20-க்குள் பொதுக்குழுவைக் கூட்டி, மாநிலத் தலைவா் மற்றும் அகில இந்திய உறுப்பினா்களை நியமிக்கும் அதிகாரத்தை தலைமைக்கு வழங்கும் தீா்மானத்தை நிறைவேற்றித் தர வேண்டும் என்று கூறியுள்ளாா்.

அதன்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு கூட்டம் செப்டம்பா் 19-இல் சத்தியமூா்த்தி பவனில் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவரையும், அகில இந்திய உறுப்பினா்களையும் தோ்ந்தெடுக்கும் அதிகாரத்தை அகில இந்திய தலைமைக்கும் அளிக்கும் வகையில் தீா்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.