சேலத்தில் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் எட்டாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் ஜான்சன்பேட்டை பிள்ளையார்நகர் பகுதியை சேர்ந்த சிவகுரு என்பவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அரசகுரு(13). அருகிலுள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 20 நாட்களுக்கு மேலாக பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பெற்றோர்கள் அரசகுருவை சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று பெற்றோர்கள் கூறியிருந்த நிலையில், நேற்றிரவு வீட்டின் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற அரசகுரு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடனே அருகில் இருந்த உறவினர்கள், பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மகனின் உடலை பார்த்து கதறி அழுத்தனர். உடனே அஸ்தம்பட்டி காவல் துறையினர் விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மாணவன் அரசகுரு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்னவென்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியில் மாணவனுக்கு ஏதாவது பிரச்னை இருந்து வந்ததா அல்லது வேற ஏதாவது காரணங்கள் உள்ளதா என்று பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies

மும்பை இந்தியன்ஸுக்காக அதிக ரன்கள்; சனத் ஜெயசூர்யாவை பின்னுக்குத் தள்ளிய ரிக்கல்டான்!
அம்மா அம்மாதான்! நூறு சாமி பாடல் புரோமோ!

அற்புதத்திற்கு குறைவில்லாத ஒன்று... மாளவிகா மோகனன் பகிர்ந்த பதிவு!
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


