கோப்புப் படம்
கோப்புப் படம்

மருத்துவப் படிப்புகளுக்கு செப். 22 முதல் விண்ணப்பிக்கலாம்! - தமிழக அரசு தகவல்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
Published on

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அதன்படி, 2022-23 ஆம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு வருகிற செப்டம்பர் 22 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

http://tnhealth.tn.gov.in, http://tnmedicalselection.org என்ற இணையதளங்களில் வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

மேலும் அதன் தொடர்ச்சியாக மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் பெரும்பாலும் ஆன்லைன் கலந்தாய்வே நடைபெறும் என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com