குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட கை: கண்டுபிடித்தது காவல்துறை
கோவை மாவட்டம் துடியலுர் அருகே குப்பைத் தொட்டியில் ஆணின் இடது கையை இரண்டு நாள்களுக்கு முன்பு காவல்துறை கைப்பற்றிய நிலையில், அது குறித்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.


கோவை மாவட்டம் துடியலுர் அருகே குப்பைத் தொட்டியில் ஆணின் இடது கையை இரண்டு நாள்களுக்கு முன்பு காவல்துறை கைப்பற்றிய நிலையில், அது குறித்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
துடியலூர் அருகே இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட ஆணின் இடது கை ஒரு பாலிதீன் கவரில் சுற்றப்பட்ட நிலையில் கடந்த 15ஆம் தேதி காவல்துறையினரால் மீட்கப்பட்டது.
இதையும் படிக்க | கபடி வீரர்களுக்கு கழிப்பறையில் பரிமாறப்பட்ட உணவு: விடியோ வைரல்
இது குறித்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியைச் சேர்ந்த பிரபு (39) என்பவருடைய கை என்பதை கண்டறிந்துள்ளனர். இவர் கோவை காந்திபுரத்தில் உள்ள அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்ததும், கடந்த 14ஆம் தேதி முதல் இவரது செல்லிடப்பேசி அணைத்துவைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.
இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவரைத் தேடி வந்தனர். எனவே, காணாமல் போன பிரபுவின் கையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...