'விலைவாசியை கட்டுக்குள் வைத்துள்ளது தமிழ்நாடு'

தமிழகத்தில் விலைவாசி கட்டுக்குள் இருப்பதாக மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.
'விலைவாசியை கட்டுக்குள் வைத்துள்ளது தமிழ்நாடு'

தமிழகத்தில் விலைவாசி கட்டுக்குள் இருப்பதாக மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது:

இந்திய அளவில் உணவுப் பொருள்களின் விலையேற்றம் 7.6%-ஆக உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் உணவுப் பொருள் விலையேற்றம் 5%-க்கு குறைவாகவே உள்ளது.

தமிழ்நாட்டில் இருக்கும் வலுவான பொதுவிநியோக  முறையால் விலையேற்றம் குறைவாக உள்ளது. பொதுவிநியோகத் திட்டத்தை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

வெளிச்சந்தையில் எண்ணெய் விலை ஏறினாலும் பொதுவிநியோக திட்டத்தின் மூலம் குறைந்த விலையில் அரசு வழங்குகிறது. பொதுவிநியோக திட்டம் தற்போது சீராக செயல்படுவதால் தமிழ்நாட்டின் சில்லறை பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


பொதுவிநியோக திட்டத்தில் வழங்கும் பொருட்களுக்கு ரூ.5000 கோடி தமிழக அரசு செலவு செய்கிறது. ரேசன் கடைகளில் அரிசிக்கு ரூ.2205 கோடியும், துவரம் பருப்புக்கு ரூ.1500 கோடியும் தமிழ்நாடு அரசு வழங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com