ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அண்ணா பிறந்தநாள்: 75 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி தமிழக சிறைகளில் இருந்து 75 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

News image
Updated On :24 செப்டம்பர் 2022, 6:04 am

DIN

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி தமிழக சிறைகளில் இருந்து 75 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாள் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழக அரசாலும் திமுகவினராலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 

இந்நிலையில் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி தமிழகத்தில் 75 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

புழல் மத்திய சிறையில் இருந்து 13 பேர், வேலூர் மத்திய சிறையில் இருந்து 2 பேர், கடலூர் மத்திய சிறையில் இருந்து 5 பேர், சேலம் மத்திய சிறையில் இருந்து ஒருவர், கோவை மத்திய சிறையில் இருந்து 12 பேர், திருச்சி மத்திய சிறையில் இருந்து 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

அதுபோல மதுரை மத்திய சிறையில் இருந்து 22 பேரும் திருச்சி பெண் சிறையில் இருந்து 2 பேரும் புழல் பெண் சிறையில் இருந்து 2 பேரும் புதுக்கோட்டை சிறையில் இருந்து 4 பேரும் என 75 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.