/

மன்மோகன் சிங் பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

News image
Updated On :26 செப்டம்பர் 2022, 5:45 am

DIN

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரும், மிகச் சிறந்த அறிஞருமான மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

மன்மோகன் சிங் அவர்கள் ஆட்சி நிர்வாகத்தில் நிலைத்தன்மையை அளித்தார், பொது வாழ்வில் கண்ணியத்தைப் பேணினார், வறுமையைப் பெருமளவில் குறைத்தார், இவை அனைத்தையும் பணிவின் சிகரமாக இருந்து அவர் சாதித்தார்.

அவர் நல்ல உடல்நலனும் மகிழ்ச்சியும் பெற்றுத் திகழ விழைகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.