சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இலங்கை சிறையிலிருந்து 56 தமிழக மீனவர்கள் விடுதலை

இலங்கை சிறையிலிருந்த தமிழக மீனவர்கள் 56 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

News image
கோப்புப்படம்
Updated On :25 ஜனவரி 2022, 11:18 am

DIN

இலங்கை சிறையிலிருந்த தமிழக மீனவர்கள் 56 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், தூத்துக்குடியைச் சேர்ந்த 56 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த டிச.18, 20 ஆம் தேதி தமிழக மீனவர்களைக் கைது செய்து இலங்கை கடற்படையினர் விசாரணை செய்து வந்த நிலையில் அவர்களை விடுதலை செய்யக்கோரி பல்வேறு அரசியல் தலைவர்களும், மீனவ சங்கத்தினரும் தொடர் அழுத்தம் கொடுத்து வந்தனர். 

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை விடுவிக்க உத்தரவு பிறப்பித்ததுடன் அவர்கள் பயன்படுத்திய படகுகளின் உரிமையாளர்கள் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசைக் கண்டித்து வரும் பிப்ரவரி.2 ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக  அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.