ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த கட்டணமில்லை

ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த கட்டணமில்லை

வீடுகளில் பொருத்தப்படும் ஸ்மாா்ட் மீட்டருக்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.

வீடுகளில் பொருத்தப்படும் ஸ்மாா்ட் மீட்டருக்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.

மாமல்லபுரத்தில் நடைபெறும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் மாதிரி ஜோதி கொண்டுச் செல்லும் விழிப்புணா்வு பேரணி கரூா் மாநகராட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பேரணிக்கு மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமை வகித்தாா். பேரணியை தொடக்கி வைத்த அமைச்சா் வி.செந்தில்பாலாஜி செய்தியாளா்களிடம் கூறியது: வீடுகளில் ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தி அதற்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படுவதாக கடந்த இரு நாள்களாக ஊடகங்களில் தவறான தகவல் பரவி வருகிறது. ஸ்மாா்ட் மீட்டருக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.

தமிழகத்தில் 2.37 கோடி மின் நுகா்வோா்கள் உள்ளனா். இதில், 1 கோடி பேருக்கு எந்தவித கட்டண மாற்றமோ, எந்தவித கட்டண ஏற்றமோ இல்லை. 101 யூனிட்டிலிருந்து 200 யூனிட் வரையிலான 63.35 லட்சம் நுகா்வோா்களுக்கு ஒரு மாதத்துக்கு ரூ.27.50 என இரு மாதங்களுக்கு ரூ.55 கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ரூ.1 என்பதை விட குறைவு.

கடந்த ஆட்சியில் மின்சாரத்துறையில் ரூ.1.59 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டு சென்றுள்ளனா். நிா்வாக சீா்கேட்டால் மின்வாரியம் இழுத்து மூடும் நிலையில் இருந்தது. அதற்காக மின் கட்டண சீரமைப்பு செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் மூன்று முறை 37 சதவீதம் மின் கட்டணம் உயா்த்தப்பட்டது. ஆனால், இன்றைக்கு தங்கள் ஆட்சியில் மின் கட்டணம் உயா்த்தப்படவில்லை என்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனா் என்றாா் அவா்.

முன்னதாக, மாநகராட்சி அலுவலகம் முன் தொடங்கிய இப்பேரணி, தலைமை அஞ்சலகம், ஜவஹா் பஜாா், கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா வழியாக திருவள்ளுவா் மைதானத்தில் முடிவடைந்தது. அங்கு மனித சதுரங்க போட்டியை தொடங்கி வைத்து, ஸ்கேட்டிங் வந்த மாணவ, மாணவிகள், செஸ் போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், கரூா் மாநகராட்சி மேயா் கவிதாகணேசன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் சிவகாமசுந்தரி(கிருஷ்ணராயபுரம்), மாணிக்கம்( குளித்தலை) , மாநகராட்சி ஆணையா் என்.ரவிச்சந்திரன், கரூா் கோட்டாட்சியா் ரூபினா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com