முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன்

15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையிலிருக்கும் யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் வழங்குவதாக பூந்தமல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

News image
Updated On :8 ஜூன் 2022, 12:51 pm IST

15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையிலிருக்கும் யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் வழங்குவதாக பூந்தமல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளி அம்மன் திருக்கோயிலில் செயல் அலுவலராக இருப்பவர் தா.அரவிந்தன். இவர் ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: 

ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, சபி நகர், 3 ஆவது தெரு சேர்ந்தவர் கார்த்திக் கோபிநாத் (33). இவர் இளைய பாரதம் என்ற பெயரில் யூடியூப் சமூக வலைத்தளம் நடத்தி வருகிறார். இவர் மிலாப் ஃபண்ட் ரைசேர் சைட் என்ற தளம் மூலமாக சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் உப கோவில்களில் உள்ள பழுதடைந்த சிலைகளை புனரமைப்பதாக பொதுமக்களிடம் இருந்து ரூ. 44 லட்சம் நிதி திரட்டியுள்ளார். இதற்கு அவர் இந்து சமய அறநிலையத்துறையிடம் முறையான அனுமதி பெறவில்லை. 

மேலும், கார்த்திக் கோபிநாத் அந்தப் பணத்தை தனது சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டுள்ளார். எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.  

இதனையடுத்து குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கார்த்தி கோபிநாத்தை தேடி வந்தனர். இந்நிலையில், தனிப்படை போலீஸார் கடந்த மே-30 ஆம் தேதி கார்த்திக் கோபிநாத்தை கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக 15 நாள் நீதிமன்றக் காவலில் இருந்த கார்த்திக் கோபிநாத்தின் ஜாமீன் மனுவை விசாரித்த பூந்தமல்லி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.