ஓபிஎஸ் ஒப்புதலின்றி தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது: வைத்திலிங்கம் பேட்டி

ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் ஓபிஎஸ் ஒப்புதல் இன்றி நிறைவேற்ற முடியாது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். 
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்

ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் ஓபிஎஸ் ஒப்புதல் இன்றி நிறைவேற்ற முடியாது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். 

அதிமுகவில் 'ஒற்றைத் தலைமை' சர்ச்சை வலுத்து வரும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று தொடர்ந்து 4-வது நாளாக ஆலோசனை மேற்கொண்டார். சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ்-இன் வீட்டில் ஆலோசனை நடைபெற்றது.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், தலைமையின் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது. ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் ஓபிஎஸ் ஒப்புதல் இன்றி நிறைவேற்ற முடியாது. அவர் முடியாது என்று சொன்னால் தீர்மானம் செல்லாது. மேலும், ‘ஒற்றைத் தலைமை’ தீர்மானம், அதிமுகவை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும். 

அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, இன்று ஓபிஎஸ்-யை சந்தித்துப் பேசினார். 'ஒற்றைத் தலைமை' பிரச்னை தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை சரிசெய்து சுமூக நிலைக்கு கொண்டுவந்து கட்சியை வலுவாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணம்போல மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஓபிஎஸ்-யிடம் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து இபிஎஸ்-யிடம் பேசுவதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.

அதுபோல வருகிற 23 ஆம் தேதி அதிமுக  பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com