‘கட்சியை அழிக்கும் சதிகாரர்கள்’: வைத்திலிங்கம் ஆவேசம்

அதிமுகவை அழிவு பாதைக்கு சதிகாரர்கள் கொண்டு செல்வதாக ஓபிஎஸ் அணியின் வைத்திலிங்கம் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
‘கட்சியை அழிக்கும் சதிகாரர்கள்’: வைத்திலிங்கம் ஆவேசம்

அதிமுகவை அழிவு பாதைக்கு சதிகாரர்கள் கொண்டு செல்வதாக ஓபிஎஸ் அணியின் வைத்திலிங்கம் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில், 23 வரைவு தீர்மானங்களையும் நிறைவேற்றிக் கொடுக்குமாறு எடப்பாடி பழனிசாமி வழிமொழிய, மேடைக்கு வந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாகக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அதிமுகவின் அடுத்த பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 11இல் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் மேடையிலிருந்து வெளியேறினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், “ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கையெழுத்திட்டால் தான் அறிவிப்பு செல்லும். இது சட்டத்திற்கு புறம்பாக நடைபெற்ற பொதுக்குழு கூட்டம். கட்சியை சதிகாரர்கள் அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கின்றனர்” என ஆவேசமாக பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com