முதல்வர் நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு

மன்னார்குடிக்கு திங்கள்கிழமை வருகை தந்த தமிழக முதல்வரின் நிகழ்ச்சியினை செய்தி சேகரிக்க பத்திரிக்கையாளர்களுக்கு முதல்வர் பாதுகாப்பு படை போலீசார் அனுமதி மறுத்தனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மன்னார்குடி நகராட்சி எல்லை  மேலப்பாலத்தில் திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மன்னார்குடி நகராட்சி எல்லை மேலப்பாலத்தில் திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது

மன்னார்குடி: மன்னார்குடிக்கு திங்கள்கிழமை வருகை தந்த தமிழக முதல்வரின் நிகழ்ச்சியினை செய்தி சேகரிக்க பத்திரிக்கையாளர்களுக்கு முதல்வர் பாதுகாப்பு படை போலீசார் அனுமதி மறுத்தனர்.

நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணியினை ஆய்வு செய்வற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தவர். பின்னர், தஞ்சை, நீடாமங்கலம், மன்னார்குடி திருத்துறைப்பூண்டி வழியாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சாலை வழியாக வாகனத்தில் சென்றார்.

மன்னார்குடி நகராட்சி எல்லையான மேலப்பாலத்தில், திமுக நகரச் செயலர் வீரா.கணேசன் தலைமையில் திமுகவினர் திங்கள்கிழமை மாலை 6.55 மணிக்கு மன்னார்குடி வருகை தந்த தமிழக முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து, மன்னார்குடி மன்னை ப.நாராயணசாமி நகரில் உள்ள நகர்மன்றத் தலைவர் மன்னை த.சோழராஜன் இல்லத்திற்கு சென்றார்.

சோழராஜன் இல்ல வாசலில் திமுகவினர், பொதுமக்களும் முதல்வரை பார்ப்பதற்காக நின்றுகொண்டிருந்தனர். பத்திரிக்கையாளர்கள் செய்தி, புகைப்படம் எடுக்க சென்ற போது. அவர்களை தடுத்து சபாரி சீருடை அணிந்த பாதுகாப்பு போலீசார், செய்தியாளர்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்றனர். நாங்கள் வீட்டிற்குள் செல்லவில்லை. பொதுமக்களும், கட்சியினரும் நிற்கும் இடத்தில் நின்றுகொள்கிறோம் என பலமுறை கூறியும், எங்களுக்கு, செய்தியாளர்களை அனுமதிக்கக் கூடாது என உத்தரவு உள்ளது.

எனவே, அதன்படி நாங்கள் உங்களை அனுமதிக்க முடியாது தெரிவித்துவிட்டு செய்தியாளர்கள் வேறுவழியில் அந்த பகுதிக்கு சென்றுவிட முடியாதபடி கூடுதல் சபாரி உடையணிந்த பாதுகாப்பு போலீசார் அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

நகர்மன்ற தலைவர் இல்லத்தில் 10 நிமிடம் இருந்த முதல்வர், அங்கு, தேனீர் அருந்திவிட்டு 7.15 மணிக்கு புறப்பட்டு சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com