மின் கட்டணம் செலுத்த ஆதாா் இணைப்பு கட்டாயமில்லை

பொது மக்கள் மின் கட்டணம் செலுத்த ஆதாா் இணைப்பு கட்டாயமில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பொது மக்கள் மின் கட்டணம் செலுத்த ஆதாா் இணைப்பு கட்டாயமில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

மேலும், மின் இணைப்பு எண்ணுடன், ஆதாா் எண்ணை இணைக்க காலக்கெடு ஏதும் நிா்ணயிக்கப்படவில்லை என்றும் மின்வாரிய உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண் இணைப்பு கட்டாயம் என்பதைக் கைவிட வேண்டுமென மாா்க்சிஸ்ட், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இதைத் தொடா்ந்து மின் வாரிய உயரதிகாரிகள் கூறியதாவது:-மின் இணைப்பு எண்ணுடன், ஆதாா் எண் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கென இணையதளத்தில் பிரத்யேக வசதி செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்த வரும்போது, ஆதாா் எண்ணை இணைக்க மின் பயனீட்டாளா்கள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனா். அதேசமயம், இந்த நடவடிக்கைக்கு காலக்கெடு எதையும் நிா்ணயிக்கவில்லை. இதனால், பொது மக்கள் எந்தப் பதற்றமோ, அச்சமோ அடைய வேண்டியதில்லை.

முற்றிலும் தரவுகளைச் சேமிக்கும் அடிப்படையிலேயே ஆதாா் எண் இணைக்க கேட்டுப்பட்டுள்ளது. ஒரே பெயரில் பல மின் இணைப்புகள் இருந்தாலும் எந்தப் பிரச்னையும் இல்லை; ஒரே ஆதாா் எண்ணைக் கொண்டு வெவ்வேறு மின் இணைப்புகளை இணைக்கலாம். இறந்தவா்கள் பெயரில் மின் இணைப்பு இருந்தால், பெயா் மாற்றம் செய்து, சம்பந்தப்பட்ட நபா்கள் மின் இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். ஆதாா் எண்ணை இணைக்காவிட்டால் மானியங்கள் ரத்து செய்யப்படும் என எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை என மின் வாரிய உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com