மதுரை - விழுப்புரம் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்: மதுரை ரயில்வே

மதுரை - விழுப்புரம் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மதுரை - விழுப்புரம் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

சமயநல்லூர் அருகே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருந்ததால் மதுரை - விழுப்புரம் விரைவு ரயில் (16868) நவம்பர் 28 முதல் நவம்பர் 30 வரை மதுரை - திண்டுக்கல்  இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. எனவே மதுரை - விழுப்புரம் விரைவு ரயில் வழக்கம் போல மதுரையில் இருந்து இயக்கப்படும். 

அதே போல மதுரை - செகந்திராபாத் (கச்சிகுடா) வாராந்திர விரைவு ரயில் (07192) நவம்பர் 30 அன்று 45 நிமிடங்கள் தாமதமாக காலை 06.15 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அனால் தற்போது மதுரை - கச்சிகுடா வாராந்திர விரைவு ரயில் நவம்பர் 30 அன்று மதுரையில் இருந்து வழக்கம் போல காலை 05.30 மணிக்கு புறப்படும் என மதுரை ரயில்வே கோட்டம் அறிவிபத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com