ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு!
கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த விவகாரத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது திருநெல்வேலி குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.


கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த விவகாரத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது திருநெல்வேலி குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழும்பியதை தொடர்ந்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் உயர்நிலை விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அலுவலர் அமுதா, இன்று இரண்டாம் கட்ட விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து, ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...