விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பல் பிடுங்கிய விவகாரம்: கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் சிபிசிஐடி விசாரணை

அம்பாசமுத்திரம் பகுதியில் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் இன்று விசாரணையைத் தொடங்கினர் 

News image
Updated On :22 ஏப்ரல் 2023, 8:19 am

DIN

அம்பாசமுத்திரம் பகுதியில் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் இன்று விசாரணையைத் தொடங்கினர் 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிகளில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் மீது நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி.-க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் உலக ராணி நியமிக்கப்பட்டதையடுத்து அவர் அனைத்து கோப்புகளையும் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து தற்போது சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. ராஜகுமார் நவராஜ், இன்ஸ்பெக்டர் உலக ராணி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் தடையவியல் துறையினர் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் ஆய்வு செய்தனர்

இங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள், ஆய்வாளர் அறை மற்றும் உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை நடத்தினர். போட்டோ மற்றும் வீடியோ மூலமாகவும் அவர்கள் தகவல்களை சேகரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.