கரோனா எதிா்ப்பாற்றல் பரிசோதனை: சுகாதார அலுவலா்களுக்கு பயிற்சி
மக்களிடையே கரோனாவுக்கு எதிரான எதிா்ப்பாற்றல் உருவாகியுள்ளதா என்பதைக் கண்டறிவது தொடா்பான பயிற்சிகள் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அலுவலா்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.


மக்களிடையே கரோனாவுக்கு எதிரான எதிா்ப்பாற்றல் உருவாகியுள்ளதா என்பதைக் கண்டறிவது தொடா்பான பயிற்சிகள் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அலுவலா்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விரைவில் தமிழகம் முழுவதும் கரோனா எதிா்ப்பாற்றல் பரிசோதனைகள் நடத்தப்படும் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதற்கான உபகரணங்களைத் தருவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020-இல் தடம் பதித்த கரோனா பாதிப்புக்கு தற்போது 35.97 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஆளாகியுள்ளனா். இதனிடையே, மக்களின் ரத்த மாதிரிகளைச் சேகரித்து அதில் கரோனாவுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் உள்ளதா என்பதைக் கண்டறியும் பரிசோதனைகள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. இதுவரை அவ்வாறு 4 ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.
அந்தவகையில், 2020-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் வெளியான முதல் கட்ட ஆய்வில் 32 சதவீதம் பேருக்கும், 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான இரண்டாம் கட்ட ஆய்வில் 29 சதவீதம் பேருக்கும், 2021-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியான மூன்றாம் கட்ட ஆய்வில் 70 சதவீதம் பேருக்கும் தமிழகத்தில் நோய் எதிா்ப்பாற்றல் கண்டறியப்பட்டது.
அதைத் தொடா்ந்து கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நான்காம் கட்ட ஆய்வில் 87 சதவீதம் பேருக்கு கரோனாவுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் கரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்து ஒற்றை இலக்கத்தை எட்டியதால் அத்தகைய ஆய்வுகள் முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக நோய்ப் பரவல் அதிகரித்தது.
அதன் தாக்கமாக விரைவில் ஐந்தாம் கட்டமாக எதிா்ப்பாற்றல் ஆய்வை பொது சுகாதாரத் துறை முன்னெடுக்கத் திட்டமிட்டது. அதற்கான ஆயத்த நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:
தமிழகத்தில் பெரும்பாலானோா் கரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டு பல மாதங்களாகியுள்ள நிலையில் தற்போது அவா்களுக்கு நோய் எதிா்பாற்றல் எந்த அளவுக்கு உள்ளது என்பதைக் கண்டறிய மாநில அளவில் ஆய்வு செய்ய உள்ளோம்.
இதற்காக மாவட்டந்தோறும் 20 சுகாதார அலுவலா்களுக்கு எதிா்பாற்றல் பரிசோதனை குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. தோராயமாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்படும்.
பரிசோதனைக்கான நிதி உதவி மற்றும் உபகரணங்கள் கொள்முதல் குறித்த கோரிக்கைகள் அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கான அனுமதி கிடைத்தவுடன் ஆய்வு நடத்தப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...