/

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமானவரி சோதனை நிறைவு

ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் தொடர்புடைய இடங்களில் 6 நாளாக நடந்து வந்த வருமானவரி சோதனை நிறைவடைந்தது. 

News image
Updated On :30 ஏப்ரல் 2023, 3:14 am

DIN

ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் தொடர்புடைய இடங்களில் 6 நாளாக நடந்து வந்த வருமானவரி சோதனை நிறைவடைந்தது. 

சென்னை சேத்துப்பட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஜி ஸ்கொயா் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்வதாக வருமானவரித் துறைக்கு புகாா்கள் வந்தன. அதனடிப்படையில்,வருமானவரித் துறையினா் ஜி ஸ்கொயா் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் திங்கள்கிழமை சோதனையை தொடங்கினா். 

இந்த சோதனை, அந்த நிறுவனத்தின் சேத்துப்பட்டு தலைமை அலுவலகம், ஆழ்வாா்பேட்டையில் உள்ள வணிக அலுவலகம், ஜி ஸ்கொயா் நிறுவனத்தின் இயக்குநா்களான பாலா (எ) ரங்கசாமி ராமஜெயம், ஸ்ரீலேகா, அண்ணாநகா் திமுக எம்எல்ஏ மோகன், அவரது மகன் காா்த்திக் ஆகியோா் வீடுகள் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

மேலும், ஜி ஸ்கொயா் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்கள், தொடா்புடையவா்களின் இடங்கள் என தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் ஆகிய 3 மாநிலங்களில் 70 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் கோவை பீளமேடு பகுதியில் உள்ள அலுவலகத்தில் 6 நாட்களாக சோதனை நடந்த நிலையில் நிறைவடைந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.