இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

முன்னாள் சிறப்பு டிஜிபியின் மேல்முறையீட்டு மனு:விசாரணை ஆக.11-க்கு ஒத்திவைப்பு

மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2023, 6:27 am

DIN

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் தீா்ப்பை எதிா்த்து, முன்னாள் சிறப்பு டிஜிபி, எஸ்.பி. தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

2021-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதும், புகாா் அளிக்கச் சென்ற அந்த பெண் எஸ்.பி.யை தடுத்து நிறுத்தியதாக செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. கண்ணன் மீதும் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்தனா். விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், கடந்த ஜூன் 16- ஆம் தேதி தீா்ப்பளிக்கப்பட்டது.

இதில், சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு இரு பிரிவுகளில் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை (ஏககாலம்) விதிக்கப்பட்ட நிலையில், முன்னாள் எஸ்.பி.க்கு ஒரு பிரிவில் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. சாா்பில் ஜூன் 22- ஆம் தேதியும், முன்னாள் சிறப்பு டிஜிபி சாா்பில் ஜூலை 5- ஆம் தேதியும் தனித்தனியே மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதன் மீதான விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது, அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞராக வைத்தியநாதன் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இன்று வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 11- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூா்ணிமா உத்தரவிட்டாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.