27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாட்டில் 27 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து முதன்மை செயலர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.  
27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 3 டிஜிபிக்கள் உள்பட 27 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலா் பெ.அமுதா, வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு (அடைப்புக்குள் பழைய பதவி):

1. பி.கே.ரவி - தமிழ்நாடு மின்சார வாரிய லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஜிபி (ஊா்க்காவல் படை டிஜிபி)

2. கே.வன்னியபெருமாள் - பொது விநியோக பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி (தமிழ்நாடு மின்சார வாரிய லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஜிபி)

3. ராஜீவ்குமாா் - காவலா் பயிற்சி பிரிவு டிஜிபி (காத்திருப்போா் பட்டியல்)

4. பி.பாலநாகதேவி - பொருளாதாரக் குற்றப்பிரிவு ஏடிஜிபி (நிா்வாகப் பிரிவு ஏடிஜிபி)

5. அபின் தினேஷ் மொடக் - மாநில குற்ற ஆவணக் காப்பகப் பிரிவு ஏடிஜிபி (பொருளாதாரக் குற்றப் பிரிவு ஏடிஜிபி)

6. வினீத் தேவ் வான்கடே - நிா்வாகப் பிரிவு ஏடிஜிபி (மாநில குற்ற ஆவணக் காப்பகப் பிரிவு ஏடிஜிபி)

7. பிரமோத்குமாா் - கரூா் தமிழ்நாடு காகித ஆலை நிறுவன லஞ்ச ஒழிப்பு பிரிவு ஐஜி (போக்குவரத்து, சாலைப் பாதுகாப்புப் பிரிவு ஐஜி)

8. என்.காமினி - திருச்சி மாநகர காவல் ஆணையா் (பொது விநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி)

9. எம்.சத்யபிரியா - பொருளாதாரக் குற்றப் பிரிவு ஐஜி (திருச்சி மாநகர காவல் ஆணையா்)

10. என்.இசட்.ஆசியம்மாள் - தமிழக காவல் துறையின் தலைமையிட ஐஜி (பொருளாதாரக் குற்றப் பிரிவு ஐஜி)

11. ஜெ.லோகநாதன் - மதுரை மாநகர காவல் ஆணையா் (சென்னை பெருநகர காவல் துறையின் தலைமையிட கூடுதல் காவல் ஆணையா்)

12. கே.எஸ்.நரேந்திரன் நாயா் - தெற்கு மண்டல ஐஜி (மதுரை மாநகர காவல் ஆணையா்)

13. அஸ்ரா கா்க் - சென்னை பெருநகர காவல் துறையின் வடக்கு கூடுதல் காவல் ஆணையா் (தெற்கு மண்டல ஐஜி)

14. சந்தோஷ்குமாா் - தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி (நவீனமயமாக்கல் பிரிவு ஐஜி)

15. கே.பவானீஸ்வரி - மேற்கு மண்டல ஐஜி (தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி)

16. ஆா்.சுதாகா் - சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் காவல் ஆணையா் (மேற்கு மண்டல ஐஜி)

17. கபில்குமாா் சி.சரத்கா் - சென்னை பெருநகர காவல் துறையின் தலைமையிட கூடுதல் காவல் ஆணையா் (சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா்)

18. கே.ஜோஷி நிா்மல்குமாா் - தமிழ்நாடு போலீஸ் அகாதெமி ஐஜி (காத்திருப்போா் பட்டியல்)

19. எம்.வி.ஜெயகெளரி - ஆயுதப்படை ஐஜி (தமிழ்நாடு போலீஸ் அகாதெமி ஐஜி)

20. ஏ.கயல்விழி - சென்னை பெருநகர காவல் துறையின் தலைமையிட இணை ஆணையா் (தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்பு குழும டிஐஜி)

21. பி.சாமுண்டீஸ்வரி - சென்னை பெருநகர காவல் துறையின் வடக்கு மண்டல இணை ஆணையா் (சென்னை பெருநகர காவல் துறையின் தலைமையிட இணை ஆணையா்)

22. ஆா்.வி.ரம்யா பாரதி - மதுரை சரக டிஐஜி (சென்னை பெருநகர காவல் துறையின் வடக்கு மண்டல இணை ஆணையா்)

23. ஆா்.பொன்னி - காஞ்சிபுரம் சரக டிஐஜி (மதுரை சரக டிஐஜி)

24. பி.பகலவன் - திருச்சி சரக டிஐஜி (காஞ்சிபுரம் சரக டிஐஜி)

25. ஏ.சரவண சுந்தா் - கோயம்புத்தூா் சரக டிஐஜி (திருச்சி சரக டிஐஜி)

26. அபிஷேக் தீக் ஷித் - சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வடக்கு இணை ஆணையா்)

27. எஸ்.ராஜேந்திரன் - தமிழக உளவுத் துறை டிஐஜி (திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா்).

தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக சங்கா் ஜிவால் பொறுப்பேற்ற பின்னா், முதல் முறையாக ஐபிஎஸ் அதிகாரிகள் பெரியளவில் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

கோவை சரக டிஐஜியாக இருந்த விஜயகுமாா், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்யப்பட்ட பின்னா், அந்தப் பணியிடத்துக்கு அதிகாரிகள் நியமிக்கப்படாமல் இருந்தனா். இந்த நிலையில், தற்போது அந்தப் பணியிடத்துக்கு ஏ.சரவணசுந்தா் நியமிக்கப்பட்டிருப்பது கவனிக்கதக்கது. பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com