நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

கீழடி அகழாய்வில் எடைக் கல் கண்டெடுப்பு!

கீழடி  9-ஆம் கட்ட அகழாய்வில் படிக கல்லால் செய்யப்பட்ட எடைக் கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2023, 11:03 am IST

கீழடி  9-ஆம் கட்ட அகழாய்வில் படிக கல்லால் செய்யப்பட்ட எடைக் கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரும்பு ஆணி, கருப்பு-சிவப்பு நிறப் பாணை  ஓடுகள் உள்ளிட்ட பொருள்கள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  

கீழடியில் நடைபெற்று வரும் 9-ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை தங்க அணிகலன், சுடுமண் விலங்கின உருவங்கள், கண்ணாடி மணிகள், எலும்பினால் செய்யப்பட்ட கூா்முனைகள் உள்பட பல தொல் பொருள்கள் கண்டறியப்பட்டன.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த ஏப்ரல் 6 -ஆம் தேதி முதல் 9 -ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக 9 குழிகள் தோண்டப்பட்டு, அகழாய்வு மேற்கொள்ளப்பட்டதில் தங்க அணிகலன், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண்ணால் செய்யப்பட்ட விலங்கின உருவங்கள், தக்களிகள், ஆட்டக் காய்கள், வட்டச் சில்லுகள், கண்ணாடி மணிகள், அஞ்சனக் கோல்கள், செப்பு ஊசி, எலும்பினால் செய்யப்பட்ட கூா்முனைகள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணிகள் என பல பொருள்கள் இதுவரை வெளிக்கொணரப்பட்டுள்ளன.

மேலும், வெவ்வேறு நிலையிலிருந்த எலும்பு, கரி மாதிரிகள் அறிவியல் பகுப்பாய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.