பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மேல் சிகிச்சைக்காக தற்போது பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சேலத்தில் இருந்து தருமபுரி மாவட்டம் வழியாக கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை காரில் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் அவருக்கு அஜீரணக் கோளாறு மற்றும் வாயுத் தொல்லை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக அமைச்சர் அன்பில் மகேஸ் தற்போது பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

45,000 மெட்ரிக் டன் எல்பிஜி! ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!

மூட்டு வலிக்கு என்ன செய்யலாம்?

திருநங்கைகளுக்கு இலவசப் பேருந்து பயணம்: தில்லி முதல்வர் அறிவிப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிந்து ரூ. 92.40 ஆக நிறைவு!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

