இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பிறந்தநாள்: தொண்டர்கள், நிர்வாகிகளை சந்தித்தார் விஜயகாந்த்

தேமுதிக தலைவா் விஜயகாந்த் வெள்ளிக்கிழமை காலை கட்சி நிா்வாகிகளையும் தொண்டா்களையும் சந்தித்தார்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2023, 12:30 pm

DIN

தேமுதிக தலைவா் விஜயகாந்த் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு, கட்சி நிா்வாகிகளையும் தொண்டா்களையும் சந்தித்தார்.

தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாகக் கையசைத்த விஜயகாந்த்தைப் பார்த்து, கட்சியினர் ஆரவாரம் செய்தனர். நிர்வாகிகளைப் பார்த்து கும்பிட்ட விஜயகாந்த், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் குழுவாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

விஜயகாந்த் தனது 71-ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அதையொட்டி, கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் வருகை தந்தார். அங்கு கட்சி நிா்வாகிகளையும் தொண்டா்களையும் சந்தித்து மகிழ்ந்தார்.

மேலும், விஜயகாந்த் சார்பில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நலமுடன் உள்ளேன்
முன்னதாக, இந்த நிகழ்வு தொடா்பாக விஜயகாந்த் வெளியிட்டிருந்த அறிக்கையில், என்னுடைய உடல்நலன் தொடா்பாக வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். நான் நலமுடன் உள்ளேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.