இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சென்னை அண்ணா சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்!

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ராயப்பேட்டை, அண்ணா சாலையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 27) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :26 ஆகஸ்ட் 2023, 5:01 am

DIN

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ராயப்பேட்டை, அண்ணா சாலையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 27) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெள்ளிக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:

அண்ணாசாலை, ராயப்பேட்டை ஜி.பி. சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ஆக.27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

இதன்படி ராயப்பேட்டை வெஸ்ட் காட் சாலையில் இருந்து வரும் மாநகரப் பேருந்துகள், கனரக வாகனங்கள், இதர வணிக வாகனங்கள் ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே திருப்பி விடப்படும்.

இந்த வாகனங்கள் ஒயிட்ஸ் சாலை, ஸ்மித் சாலை வழியாக அண்ணாசாலையை அடையலாம். இந்த வாகனங்கள் ஜி.பி. சாலை வழியாக அண்ணாசாலை செல்ல அனுமதி இல்லை.

இரு சக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்கள் வழக்கம் போல் ஜி.பி. சாலை வழியாக அண்ணா சாலைக்குச் செல்லலாம்.

ஜி.பி. சாலை வழியாக அண்ணா சாலைக்கு அனுமதிக்கப்படும் இரு சக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்கள் வலது பக்கம் திரும்பி டேம்ஸ் சாலை வழியாகச் செல்ல அனுமதி கிடையாது. இந்த வாகனங்கள் இடது பக்கம் திரும்பி ஸ்பென்சா் சந்திப்பில் ‘யு’ திருப்பம் செய்து, அண்ணா சாலை, டேம்ஸ் சாலை வழியாகச் செல்லலாம்.

அண்ணா சாலை - வாலாஜா சந்திப்பு - அண்ணா சிலையில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் வழக்கம்போல் ஜி.பி. சாலையில் அனுமதிக்கப்பட்டு, ராயப்பேட்டை மணிக் கூண்டு வழியாக செல்லலாம்.

ஸ்பென்சா் சந்திப்பில் இருந்து ஜி.பி. சாலையை நோக்கி வரும் வாகனங்கள், டேம்ஸ் சாலை, பிளாக்கா்ஸ் சாலை வழியாகச் சென்று ஜி.பி. சாலையை அடையலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.