தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வரும் 29ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

ஓணம் பண்டிகையையொட்டி சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா வரும் 29ஆம் தேதி இயங்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. 

News image
Updated On :27 ஆகஸ்ட் 2023, 9:03 am

DIN

ஓணம் பண்டிகையையொட்டி சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா வரும் 29ஆம் தேதி இயங்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. 

செவ்வாய்தோறும் உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலையில் வரும் 29ஆம் தேதி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 602 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்து 400 மிருகங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 

பூங்காவுக்கு தினந்தோறும் சராசரியாக 2,500 முதல் 3,000-க்கும் மேற்பட்ட பாா்வையாளா்கள் வந்து செல்கின்றனா். வார இறுதி நாள்களில் சுமாா் 10 ஆயிரம் போ் பூங்காவுக்கு வந்து செல்வதாக பூங்கா நிா்வாகம் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.