நாட்டின் பிற பகுதிகளை விட தமிழ்நாட்டில் விலைவாசி குறைவு: அமைச்சர் தங்கம் தென்னரசு

நாட்டின் பிற பகுதிகளை விட தமிழ்நாட்டில் விலைவாசி குறைவாக உள்ளது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.  
நாட்டின் பிற பகுதிகளை விட தமிழ்நாட்டில் விலைவாசி குறைவு: அமைச்சர் தங்கம் தென்னரசு

நாட்டின் பிற பகுதிகளை விட தமிழ்நாட்டில் விலைவாசி குறைவாக உள்ளது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் 2022-2023ஆம் ஆண்டில் பொருளாதாரம் 8.19% அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. 2021-22ல் தமிழ்நாட்டின் பொருளாதாரம் இந்தியாவின் 2ஆவது பெரிய பொருளாதாரமாக இருந்தது. நாட்டின் பிற பகுதிகளை விட தமிழ்நாட்டில் விலைவாசி குறைவாக உள்ளது. 
தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் ரூ.1,66,727ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் தனிநபர் வருமானம் ரூ.98,374ஆக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அதைவிட அதிகமாக ரூ.1,66,727ஆக உள்ளது. இந்திய அளவிலான தனநபரின் சராசரி ஆண்டு வருமானத்தைவிட தமிழ்நாட்டில் கணிசமாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பணவீக்க குறியீட்டு என் 2022-23ஆம் ஆண்டில் 5.97ஆக உள்ளது. 
இந்திய உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.1%ஆக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக சராசரியாக 8% வளர்ச்சியை தமிழ்நாடு சந்தித்து வருகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் என்பது அனைத்துத் துறைகளிலும் சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com