திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சாலை விபத்தில் 2 ஊராட்சி மன்ற தலைவர்கள் பலி: முதல்வர் இரங்கல்

விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 ஊராட்சி மன்ற தலைவர்கள் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

News image

மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)

Updated On :31 ஆகஸ்ட் 2023, 3:02 pm IST

சென்னை:  விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 ஊராட்சி மன்ற தலைவர்கள் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 
விருதுநகர் மாவட்டம், செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் கருப்பசாமி, கிருஷ்ணபேரி ஊராட்சி மன்றத் தலைவரான வினோதினி கணவரான அபிமன்னன், ஊரக வளர்ச்சி இயக்குநர் அவர்களைச் சந்தித்து மனு கொடுக்கச் சென்னைக்குக் காரில் சென்று கொண்டிருந்த போது, மணப்பாறை அருகே ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன்.

கருப்பசாமி மற்றும் அபிமன்னன் ஆகியோரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் கோமதி சங்கர் (நடுவப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டிச்செல்வியின் கணவர்) உரிய சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

விபத்தில் காயமடைந்தோர் அனைவரும் விரைவில் நலம்பெற விழைகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.