மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சென்னையில் பெய்த தொடர்மழையில் கட்டடச் சுவர் இடிந்து விபத்து - இருவர் உயிரிழப்பு!

சென்னையில் பெய்துவரும் தொடர்மழையால், கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில்  இரண்டு  இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :4 டிசம்பர் 2023, 3:10 am

DIN

சென்னையில் ‘மிக்ஜம்’ புயலால்  நேற்று நள்ளிரவு முதல், தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்தநிலையில், சென்னையில் பெய்துவரும் தொடர்மழையால், கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளுக்குள் சிக்கி இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை கானாத்தூர், ஈசிஆர் இந்திராகாந்தி தெருவில் புதியதாக கட்டடம் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த நிலையில், மழையில்  நனைந்திருந்த கட்டடத்தின் ஒருபக்கச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

அதில், கட்டடத்தினுள் தங்கியிருந்த 20 வயதான ஜாகீர்  மற்றும் 30 வயதான அப்ரோஸ் ஆகிய இரு இளைஞர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.