நெல்லையில் கனமழை: விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு!

விக்கிரமசிங்கபுரம், திருப்பதியாபுரம், வேம்பையாபுரம் மற்றும் செட்டிமேடு பகுதி விவசாயிகள் கலந்துகொள்ள முடிவு செய்யப்பட்டிருந்தது. 
நெல்லையில் கனமழை: விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு!

நெல்லை மாவட்டத்தில்  தொடர் கனமழை பெய்து வருவதன் காரணமாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், பாபநாசம் வனச்சரக அலுவலகத்தில் திங்கள்கிழமை (டிச.18) காலை 10 மணியளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில், விக்கிரமசிங்கபுரம், திருப்பதியாபுரம், வேம்பையாபுரம் மற்றும் செட்டிமேடு பகுதி விவசாயிகள் கலந்துகொள்ள முடிவு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. 

நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதால், பல்வேறு வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com