மீட்புப் பணியில் கடற்படை ஹெலிகாப்டர்!

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடற்படையின் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது.
மீட்புப் பணியில் கடற்படை ஹெலிகாப்டர்!

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடற்படையின் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை காலைமுதல் பெய்து வரும் அதிகனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

குறிப்பாக தாமிரவருணி ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கும் மேல் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், கரையோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மீட்புப் பணிகளை தீவிரப் படுத்துவதற்காக முப்படைகளின் உதவிகளையும் தமிழக அரசு கேட்டுள்ளதாக இன்று காலை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்துக்கு இன்று பிற்பகல் வருகை தந்த இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்படவுள்ளது.

அதேபோல், சூலூர் விமானப் படை தளத்தில் இருந்தும் விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com