நெல்லை உள்பட 5 மாவட்டங்களில் அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு!

நெல்லை உள்பட 5 மாவட்டங்களில் வருகிற டிச. 23-ம் தேதி வரை நடைபெற இருந்த பொறியியல் படிப்புக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

நெல்லை உள்பட 5 மாவட்டங்களில் வருகிற டிச. 23-ம் தேதி வரை நடைபெறவிருந்த பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் இன்று (செவ்வாய்க்கிழமை ) அறிவித்துள்ளது. 

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக அங்கு பெய்த அதி கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் வருகிற டிச. 23-ம் தேதி வரை நடைபெற இருந்த பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் நாகர்கோவில் மையத்தில் பதிவு செய்திருந்த மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com