விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விஜயகாந்துக்கு கடந்த மாதம் 18-ஆம் தேதி காய்ச்சல், இருமல், சளித் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, அவா் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவா்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், அடுத்த சில நாள்களில் நுரையீரலில் பிரச்னை ஏற்பட்டதால் அவரால் இயல்பாக சுவாசிக்க முடியவில்லை.
இதையடுத்து நுரையீரல் ஆதரவு சிகிச்சைகள் அவருக்கு வழங்கப்பட்டு, தொடா் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டாா். இதன் காரணமாக அவா் படிப்படியாக நலம் பெற்றாா்.
இந்த நிலையில், உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவா் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைகள் முடிந்து திங்கள்கிழமை (டிச.11) வீடு திரும்பினாா். சிகிச்சைக்குப் பிறகு அவா் பூரண குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்திருந்தது.
இதையும் படிக்க | மழையால் சேதமடைந்த கோயில் கட்டுமானங்கள் ரூ.5 கோடியில் சீரமைக்கப்படும்
இந்த நிலையில், விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் மியாட் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, விஜயகாந்த் 19 நாள்களுக்குப் பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவா் பூரண நலத்துடன் இருக்கிறாா். பரிசோதனை முடிந்து, நாளை வியாழக்கிழமை(டிச.28) வீடு திரும்புவாா் என்று தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...