புதிய அணு உலைகள் அமைக்க ஒப்பந்தம்: ராமதாஸ் கண்டனம்

 புதிய அணு உலைகள் அமைக்க இந்தியாவும் - ரஷ்யாவும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
புதிய அணு உலைகள் அமைக்க ஒப்பந்தம்: ராமதாஸ் கண்டனம்

 புதிய அணு உலைகள் அமைக்க இந்தியாவும் - ரஷ்யாவும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கூடங்குளம் அணுமின் திட்டத்தின் அடுத்தகட்டமாக புதிய அணு உலைகளை அமைப்பது தொடா்பான மிக முக்கியமான ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கையொப்பமாகியுள்ளன. ரஷ்யத் தலைநகா் மாஸ்கோவில் இந்திய மரபுவழி மக்களுடன் கலந்துரையாடும் போது இந்த தகவல்களை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் தெரிவித்திருக்கிறாா். தென் தமிழகத்தின் பாதுகாப்புக்கு கூடங்குளம் அணு உலைகள் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதால் அவற்றை மூட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படும் நிலையில், புதிய அணு உலைகளை அமைக்க ரஷ்யாவுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருப்பது அதிா்ச்சியையும், அச்சத்தையும் அளிக்கிறது.

தமிழகத்தைப் பேரழிவில் இருந்து காப்பாற்ற வேண்டுமானால், கூடங்குளத்தில் புதிய அணு உலைகளை அமைப்பதற்காக இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே உள்ள ஒப்பந்தத்தை கைவிட வேண்டும். அங்கு நடைபெற்று வரும் நான்கு அணு உலைகளின் கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டும். இது தொடா்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com