தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது விஜயகாந்த்தின் உடல்!
தீவுத்திடலிலிருந்து கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு விஜயகாந்த்தின் உடல் கொண்டுவரப்பட்டது.


தீவுத்திடலிலிருந்து கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு விஜயகாந்த்தின் உடல் கொண்டுவரப்பட்டது.
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் உயிரிழந்தார்.
விஜயகாந்த்தின் உடல் மக்கள் அஞ்சலிக்காக இன்று காலை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. இவரின் உடலுக்கு முக்கியத் தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிலையில் மதியம் 2 மணியளவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல் தீவுத்திடலிலிருந்து புறப்பட்டது. மக்கள் வெள்ளத்தில் விஜயகாந்த்தின் உடல் கண்ணீர் மல்க மிதந்த வந்தது.
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்னும் சற்று நேரத்தில் விஜயகாந்த்தின் உடல் அரசு முழு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...