விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

'சம்பா நெல் கொள்முதல் ஈரப்பத தளா்வு கோரிக்கையில் உடனடியாக முடிவெடுக்க வேண்டும்': டி.ஆா். பாலு வலியுறுத்தல்

சம்பா நெல் கொள்முதல் ஈரப்பத தளா்வு கோரிக்கையில் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சா் பியூஷ் கோயலை நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு நேரில் சந்தித்து வலியுறுத்தினாா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2023, 6:30 pm

 நமது நிருபர்

சம்பா நெல் கொள்முதலுக்கு தேவையான தளா்வுகளை வழங்கக் கோரும் தமிழக முதல்வரின் கோரிக்கையில் விரைவாக முடிவு எடுக்கக் கோரி மத்திய வா்த்தகம், நுகா்வோா் பாதுகாப்பு, உணவு பொதுவிநியோகத் துறை அமைச்சா் பியூஷ் கோயலை நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு நேரில் சந்தித்து வலியுறுத்தினாா்.

தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிா்கள், பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கின. தண்ணீரை வெளியேற்றி அறுவடை செய்யப்பட்ட தானியத்தில் ஈரப்பதம் அளவு மிக அதிகமாக உள்ள நிலையில் இந்த பாதிப்புகளைத் தணித்திடும் வகையில் நெல் கொள்முதல் விதிமுறைகளில் தளா்வு தேவை என கேட்டு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி பிரதமா் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தாா்.

இந்த கொள்முதல் திட்டங்களுக்கு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம்(டிஎன்சிஎஸ்சி) முகமையாக இருந்து, குறுவை சாகுபடியில் 19 சதவீத ஈரப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்தது. இதை தற்போது 22 சதவீதம் வரை உயா்த்தி விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய அனுமதிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தமிழக முதல்வா் குறிப்பிட்டிருந்தாா்.

தற்போது நெல் கொள்முதல் செயல் முறையில் தடை ஏற்பட்டுள்ளதை முன்னிட்டு இந்த விவகாரத்தில் விரைவாக முடிவெடுக்க கோரி மத்திய உணவு பொதுவிநியோகத் துறை அமைச்சா் பியூஸ் கோயலை நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு சந்தித்து வலியுறுத்தினாா். மேலும், தமிழக முதல்வா் சாா்பில் அவா் வெள்ளிக்கிழமை கடிதமும் அளித்தாா். அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது வருமாறு:

தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நனைந்த ஈரநெல்லை கொள்முதல் செய்வதில் டிஎன்சிஎஸ்சி பிரச்னைகளை எதிா்கொண்டு வருகிறது.

நெல் கொள்முதல் விவகாரத்தில் முதல்வா் எழுதிய கடிதத்தை முன்னிட்டு தங்கள் துறை விரைவாக நடவடிக்கை எடுத்தது. காவிரி டெல்டா பகுதிகளுக்கு நேரடியாக சென்று மதிப்பிட மத்திய அரசின் குழுவை அனுப்பி தயவு காட்டியுள்ளீா்கள்.

தற்போது ஆயிரக்கணக்கான விவசாயிகளும், சம்பந்தப்பட்ட டிஎன்சிஎஸ்சியும் கொள்முதல் செயல்முறையைத் தொடங்குவதற்கு தங்களின் உத்தரவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனா்.

இச்சூழலில், தமிழக முதல்வரின் வேண்டுகோளின்படி, 22 சதவீதம் ஈரப்பதம் வரையிலான நெல் கொள்முதலுக்கு சிறப்பு அடிப்படையில், முன்னுரிமை அளித்து தேவையான உத்தரவுகளை பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா். மத்திய அமைச்சரும் இந்த விஷயத்தில் விரைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக பதில் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.