பழங்குடியின மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக பாடுபடுவேன்: சி.பி.ராதாகிருஷ்ணன்

பழங்குடியின மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக பாடுபடுவேன் என்று ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பழங்குடியின மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக பாடுபடுவேன் என்று ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பணியாற்றுவேன் என்று ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

தமிழகத்துக்கு மீண்டும் ஒரு ஆளுநர் பதவியை குடியரசுத் தலைவரும், பிரதமர் மோடியும் அளித்துள்ளனர். அவர்கள் தமிழகத்தின் மீதும், தமிழ் கலாசாரத்தின் மீதும், தமிழ்மொழியின் மீது எத்தகையை அன்பும், பாசமும், மரியாதையும், பெருமையும் வைத்துள்ளனர் என்பதற்கு உதாரணமாக உள்ளது. 

தமிழகத்தைச் சார்ந்த 3 பேர் ஆளுநராக இருப்பது என்பது புதிய வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது. எனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த பதவியின் மூலமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழை எளிய மக்கள் அதிகமாக வாழும் மாநிலத்தில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்துள்ளது. 

இந்த வாய்ப்பை பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பணியாற்றுவேன். இது நிச்சமாக எனக்குக் கிடைத்த பெருமையாக நான் நினைக்கவில்லை. தமிழ் இனத்துக்குக் கிடைத்த பெருமையாகும். ஆகவே, குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் தமிழகத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

மத்திய அரசுக்கும், ஜார்க்கண்ட் மாநில அரசுக்கும் பாலமாக இருந்து அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன் என்றார். இந்த சந்திப்பின்போது பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com