அதிமுக நிர்வாகிகள் நியமனத்துக்கு கே.பி.முனுசாமி ஒரு கோடி ரூபாய் கேட்டதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆடியோ வெளியிட்டு புகார் தெரிவித்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இரு அணிகளும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன.
இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வரும் நிலையில், தற்போது இபிஎஸ் தரப்பு ஆதரவாளரான கே.பி.முனுசாமி மீது ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதிமுக நிர்வாகிகள் நியமனத்துக்கு கே.பி.முனுசாமி ஒரு கோடி ரூபாய் கேட்டதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆடியோ வெளியிட்டுள்ளார்.
ஆடியோவில், முதலில் 50 தயார் செய்துள்ளேன், மாலைக்குள் மீதி 50 - யை தயார் செய்கிறேன் என்று கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, கே.பி. முனுசாமியிடம் கூறுகிறார். பின், பணத்தை பெற்றுக்கொள்ள தனது மகனை அனுப்புவதாக கே.பி.முனுசாமி கூறுகிறார்.
ஆடியோ வெளியிட்டு அதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, 'கே.பி. முனுசாமி பற்றி தொண்டர்களுக்கு தெரிய வேண்டும் என்பதால் இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளேன். இந்த ஆடியோவுக்கு பதில் தராவிட்டால் விடியோவையும் வெளியிடுவேன். மேலும் தங்கமணி, வேலுமணி குறித்த விடியோவையும் வெளியிடுவேன்.
கே.பி. முனுசாமி இன்று ஓபிஎஸ்ஸை குறை சொல்கிறார். அவர் பணத்துக்காக வேலை செய்பவர்' என்று கடுமையாக சாடியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கேரள தோ்தல்: சிபிஎம் வேட்பாளா்கள் அறிவிப்பு!தா்மடத்தில் முதல்வா் பினராயி போட்டி!
கடன் நெருக்கடியில் தமிழ்நாடு?

குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவா்களுக்கு சிலிண்டா் கிடையாது! இணைப்பை ஒப்படைக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தல்!
அடகு நகையை மீட்டுத் தருவதாகக்கூறி 33 பவுன், ரூ.25 லட்சம் மோசடி செய்தவா் கைது!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

