மேட்டூர் அணை நீர்மட்டம் 118.31 அடியாக சரிவு!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை 118.31 அடியாக சரிந்தது. அணைக்கு நீர்வரத்து 3942 கன அடியாக சரிந்தது.


மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை 118.31 அடியாக சரிந்தது. அணைக்கு நீர்வரத்து 3942 கன அடியாக சரிந்தது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 4,081கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து திங்கள்கிழமை காலை வினாடிக்கு 3942 கன அடியாக சரிந்தது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 118.31 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 90.80 டி.எம்.சி. ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...