
புதுச்சேரி: சுமார் இரண்டு மாத காலத்துக்குப் பிறகு புதுச்சேரியில் நேற்று புதிதாக ஐந்து பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 700 பேரிடம் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் ஐந்து பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐந்து பேரில் மூன்று பேர் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் என்றும் மற்ற இருவரும் ஏனாம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. மாஹே மற்றும் காரைக்கால் பகுதிகளில் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இதன் காரணமாக ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 1,75,531 ஆகப் பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.