இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.


தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவைக் கூட்ட அரங்கில் இன்று காலை 11 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டையடுத்து, தமிழக சட்டப்பேரவையின் புதிய கூட்டத்தொடா் ஆளுநா் ஆா்.என்.ரவி உரையுடன் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் ஆளுநா் உரையில் இடம் பெறவேண்டிய முக்கிய அம்சங்கள், புதிய அறிவிப்புகள் ஆகியன குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
மேலும், பேரவைக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட வேண்டிய முக்கிய சட்ட மசோதாக்கள் தொடா்பாகவும் ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
அமைச்சரவையில் புதிதாக இணைந்துள்ள உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...