அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது! பேரவையில் ஓபிஎஸ் இருக்கை குறித்து முறையிட முடிவு!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது.


சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது.
அதிமுகவின் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. ஓபிஎஸ், இபிஎஸ் இரு தரப்பினரும் தங்களது ஆதரவாளர்களை கட்சியின் முக்கிய பொறுப்புகளில் நியமித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் சென்னை, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
இதில் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாகத் தெரிகிறது. மேலும் சட்டப்பேரவை தொடங்கியுள்ள நிலையில் அதுகுறித்தும் விவாதிக்கப்படுகிறது.
மேலும் கட்சி விவகாரத்தில் இன்றைய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் ஓ.பன்னீர் செல்வம் அமர்ந்தது குறித்து பேரவைத் தலைவர் அப்பாவு -விடம் முறையிட இபிஎஸ் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கி பதிலாக ஆர்.பி.உதயகுமாரை இபிஎஸ் நியமித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ஆளுநர் உரை: தெலங்கானா வழி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...