சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் முதல் நாளில், ஆளுநர் உரையின்போது நடந்த அசாதாரண சம்பவங்கள் குறித்து அவைத் தலைவர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், சட்டப்பேரவையில் விதிகளுக்கு உள்பட்டுதான் எம்எல்ஏக்கள் பேச வேண்டும் என்றும் அப்பாவு அவையில் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிக்க.. குடும்பங்களை ஈர்க்கிறதா வாரிசு? திரை விமர்சனம்
தமிழ்நாடு பேரவைக் கூட்டத்தில் இன்று பேசிய அவைத் தலைவர் அப்பாவு, ஆளுநர் உரையின்போது குளறுபடிகள் நடந்தன. ஆனால், சட்டப்பேரவையின் மாண்பை காக்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மதிநுட்பத்துடன் செயல்பட்டார்.
தமிழக அரசு தயாரிக்கும் உரையை படிக்க வேண்டியது மட்டுமே ஆளுநர் கடமை. ஆளுநர் உரையில் இருக்கும் வரிகளுக்கு தமிழக அரசுதான் பொறுப்பு. சட்டப்பேரவையில் அசாதாரண சூழலை உருவாக்கியது அரசு அல்ல. உரையில் சில பகுதிகளை விடுத்தும் சில பகுதிகளை இணைத்தும் ஆளுநர் பேசியதால் பேரவையில் அசாதாரண சூழல் நிலவியது. அதே வேளையில், சட்டப்பேரவையின் மாண்பை காக்கும் வகையில் செயல்பட்ட முதல்வருக்கு நன்றி.
மேலும், ஆளுநரை உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசும் எம்எல்ஏக்கள் பேரவையின் மாண்பை காக்கும் வகையில் கண்ணியத்துடன் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அப்பாவு ஆளுநர் உரையின் போது காட்டிய கண்ணியத்திற்காக தமிழ்நாடே ஒட்டுமொத்தமாக முதல்வர் ஸ்டாலினின் துணிவை பாராட்டிக்கொண்டு உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கட்டுக்குகள் நீலகிரி காட்டுத் தீ: வனத் துறை விளக்கம்

அம்பேத்கா் பல்கலைக்கழகத்தில் 5 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம்

டாஸ்மாக் ஊழியா்கள் பெருந்திரள் முறையீடு

அபிராமி அம்மன் கோயில் தேரோட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

